Tuesday, April 19, 2016

ஆர்டர்

ஆர்டர் (order)

டிங்..டாங்..டிங்...டாங்
கதவு திறக்கப்படுகிறது
சார் ,.. பீட்சா” (இப்படி கூப்பிடுவார்களா என்று தெரியவில்லை வழக்கப்படி எழுதிவிட்டேன் -ரை)
கதவைத் திறந்தவருக்கு 72 இருக்கலாம்... ஒரு ஆரஞ்சு நிற levi's டிஷர்ட்டும், நீல நிற ஷார்ட்சும் அணிந்திருந்தார்... இதிலிருந்து அவர் பணக்காரர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் (டேய் முண்டம் அந்தாளு பீட்சா ஆர்டர் பண்ணதலேயே பணக்காரனு தெரிஞ்சுப்போச்சு... விளக்காம கதைய மட்டும் சொல்லு - ரீ)
 “ எவ்வளவு ஆச்சு தம்பி
  “ 675 rupees சார் ”
 “ 675 !..ம்ம்ம்(யோசிக்கிறார்) என்னன்ன கொண்டு வந்திருக்க??
 “ 2 மீடியம் பெப்பரானிக் சிக்கன் சீஸ் பீட்சா சார் ”
 “ ஆனா நான் ஒண்ணு தானே ஆர்டர் பண்ணுன
“ இல்ல சார் ... ஆர்டர் ரெண்டு புக் ஆகியிருக்கு சார் ...”
 “ ஏம்பா இந்த வீட்டுல இருக்கறதே நான் மட்டும் தான் ...எதுக்கு ரெண்டு ஆர்டர் பண்ணப் போறேன்
"எல்லாம் கரெக்டா இருக்கே சார் ... நீங்க வேணா கொஞ்சம் யோசிச்சு பாருங்க ... மறந்துருக்க போறீங்க"
 “ என்ன பாத்தா என்ன மறதி வியாதி இருக்கற மாதிரி தெரியுதா... நான் நாப்பதைஞ்சு வருஷம் maths professor இருந்துருக்கேன்,.. numbers கூட என்னோட முக்கால் வாசி வாழ்க்கைய வாழ்ந்துருக்கேன்.. என்னப் போயி மறந்துட்டேன்னு சொல்ல வரியா " என்றார் கோபமாக
     இவன் சற்று சங்கடமான சூழ்நிலையை உணர்ந்தான்... உடனே
" சாரி சார்... நான் வேணா ஆர்டர ரிட்டர்ன் எடுத்துக்கறேன்.  sorry for disturbing you "  என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்...
நில்லு
அவன் அப்படியே நின்று திரும்பி அவரைப் பார்க்கிறான்.
சாரி... நானும் கொஞ்சம் harsh behave பண்ணிட்டேன் . உள்ள வந்து வச்சுட்டு போ
 "சார் ... உங்களுக்கு ஒண்ணும் problem இல்லயே "
 “nothing... you just come inside"
அவனும் உள்ளே நுழைந்து அங்கு இருந்த டைனிங் டேபிளின் மீது பார்சலை வைத்தான் . அவர் உள்ளே சென்று கை கழுவிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தார் . இவன் நின்று கொண்டே இருப்பதை பார்த்தவர்
உட்காருப்பா...” என்றார்.
"இல்ல சார் ... வேண்டாம்"
சும்மா உட்காருப்பா ... சேருக்கு ஒண்ணும் வலிக்காது ”. ( டேய்... இதவிட ஒரு நல்ல கவுண்டர் உனக்கு கிடைக்கலயா - ரீ)
அவனும் மெலிதாக புன்னகைத்துவிட்டு அமர்ந்தான் . இப்போது தான் அவர் அவனை கவனிக்க ஆரம்பித்தார் . பீட்சா shop uniform அணிந்திருந்தான் ,(ங்ங்ங்ங் - ரீ) ஷூ இல்லை ஷாக்ஸ் இருந்தது ஒருவேளை வெளியே கழட்டிவிட்டிருக்கலாம் மிடில் கிளாஸ் போல . ( ஏண்டா பீட்சா boy என்ன business man-வா இருப்பான் - ரீ) . 19 வயது இருக்கலாம் .. ஒல்லியாக இருந்தான்.. கையில் சாமி கயிறு கட்டியிருந்தான் ... இப்படி கவனித்துக் கொண்டே வந்தவர் அவனது இடது கை கட்டைவிரலில் band aid இருப்பதை பார்த்துவிட்டு .
என்ன அது ... band aid "  என்றார்.
அவனும் ஒருமுறை அந்த band aid பார்த்துவிட்டு .
நேத்து ,... காலேஜ்ல நடந்த மேட்ச்சுல ball கேட்ச் பண்ணும் போது அடிபட்டுருச்சு சார்
... நீ படிக்கிறீயா... அப்ப பீட்சா shop "
" பார்ட் டைம் வேலை பார்க்குறேன் சார்... பாக்கெட் மணிக்காக
வெரிகுட் வெரிகுட் ... ஆமா .. உன் பேரு என்னஎன்ன படிக்கற ?”
" அர்ஜுன் ,.. third year BE EEE ,. தியாகராஜா காலேஜ்ல படிக்குறேன் சார்"
தியாகராஜா காலேஜ் !! ம் ... குட் .. மெரிட் வந்தியா
" ஆமா சார் ,.. ப்ளஸ் டூ வுல 97 percentage .. "
" குட் ,.. நானும் ஒரு 53 வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் மெரிட்ல பாஸ் ஆகி வந்தேன்... அப்பலாம் மெரிட்ல கிடைக்குறது ரொம்ப கஷ்டம் , இப்ப இருக்கற மாதிரி புக்ஸ் , கோச்சிங் சென்டர் எதுவும் இருக்காது , நம்மளா தான் படிச்சு முன்னே........” என்று பேசிக் கொண்டே சென்றவரை  இடைமறித்து
 “ சார் .. டைம் ஆயிடுச்சு bill amount pay பண்ணிட்டீங்கனா கிளம்பிடுவேன்” என்றான்
இருப்பா ... நீ சாப்பிட்டியா
 “ இன்னும் இல்ல சார் ... வேலை முடிஞ்சனோ தான் போய் சாப்பிடனும்  ”
அப்படினா ... இங்கயே சாப்பிட்டுட்டுபோப்பா நீ தான் ரெண்டு கொண்டு வந்திருக்கீயே ...”
வேண்டாம் சார்... ஷாப் க்கு சீக்கிரம்  போகலனா திட்டுவாங்க
ட்ராஃபிக் அது இதுனு சொல்லி சமாளிக்க வேண்டியதுதானே
இல்ல சார் ... வேண்டாம்
அப்படியா ..ம்ம்ம் (யோசிக்கிறார்) .. இந்த ஒரு பீட்சா நீயே எடுத்துட்டுப் போ .. ஃப்ரீயா இருக்கும்போது சாப்பிடு
             இவன் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தான் ... பின்னர் ஒருவழியாக சாப்பிட சம்மதித்தான் ... இருவரும் பீட்சாவைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தனர்... சாப்பிடும்போது அவர் இவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் படிப்பு , குடும்பம் என இடையிடையே அவரது கதையையும் சொன்னார்... இவன் அவரிடம் எதுவும் கேட்கவில்லை பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான் .. அதுபோக கேள்வி கேட்கவும் அவர் அவகாசம் கொடுக்கவில்லை ... சாப்பிட்டு முடித்தபின் ( என்ன கைகழுவினாங்களா - ரீடரு ) ( இல்ல டிஷ்யு துடைச்சுட்டாங்க - ரைட்டரு) தனது பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தார் ..அவனும்  மீதி சில்லரையைக் கொடுத்து விட்டு புன்னகையுடன் கிளம்ப எத்தனித்தான் ... அப்போது அவரிடம் அவரது குடும்பம் , குழந்தை , மனைவி இன்னும் சில பற்றியெல்லாம் கேட்க நினைத்து கேட்காமல் அவரிடம் ,..
 சார் ,.. தனியா இருக்கீங்களாஎன்றான் .
இல்லையே ..” பெரிதாக சிரிக்கிறார்
     அவனும் சிரித்தபடியே அவரிடம் இருந்து விடைப்பெற்று தனது பைக்கை self start செய்து கிளம்பினான் . அவர் கதவை அடைத்து விட்டு sofa வில் வந்து அமர்ந்தார் . பின்னர் சிறிது நேரம் டி.வி பார்த்தார் , வார இதழ்களைப் படித்தார் , மொட்டை மாடியில் இருந்து போவோர் வருவோர் எல்லாம் பார்த்தார் , மீண்டும் டிவி பார்த்தார் , பாத்ரூம் சென்றார் , டி.வி பார்த்தார் , வாட்ச்சைப் பார்த்தார் மணி ஒன்பது என்று காட்டியது . செல்போனை எடுத்து aasif restaurant என்று சேமிக்க பட்டிருந்த எண்ணுக்கு அழைத்தார்.. டிரிங் டிரிங்..டிரிங் டிரிங்..டிரிங் டிரிங்..டிரிங் டிரிங்..டிரிங் டிரிங்..டிரிங் டிரிங்..
ஹலோ.. aasif restaurant  ” ஆண்குரல் கேட்டது .
............................................................
............................................................
.......................................................
     இரண்டு பிரியாணி ஆர்டர் செய்தார் .. பின்னர் வாசலைப் பார்த்து அமர்ந்து கொண்டார் .

                                                                           -கத்துக்குட்டி

1 comment: