Monday, September 22, 2014

                                                  எனது கீச்சுகள்
அவங்களுக்கு வாங்கி பழகிருச்சோ இல்லையோ
நமக்கு கொடுத்து பழகிருச்சு
#லஞ்சம்

எதார்த்த சோதிடர் ஷெல்வி
அடக்கடவுளே இதுல என்னடா எதார்த்தம் .....!!!

இப்போதெல்லாம் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும்போது
ஏனோ குற்றவுணர்வு தோன்றுகிறது
(நான் வளர்கிறேனே மம்மி,...!!!)

ஆளில்லா வாரண்டாவைப்
பார்க்கும்பொழுதெல்லாம் தனிமை
பிடித்துக்கொள்கிறது.......,

கூச்ச சுபாவத்திலிருந்து விடுபட நினைக்கிறேன்
ஆனால் விடுபட கூச்சமாக இருக்கிறது,....!!

நமக்கு தெரிந்ததை பற்றிப் பேசினாலே
சொல்கிறார்கள் “சீன் போடாதே”

விமர்சகர்கள் விமர்சகர்களாகவே இருந்தால்
ரொம்ப நல்லது,........!!!!!

பொறுப்பை விமர்சிப்பவர்கள்
பொறுப்பை ஏற்றவுடன் விமர்சிக்கப்படுகிறார்கள்....

சுயமைதுனம் செய்யக்கூடாது என்று தினமும்
நினைக்கிறேன் சுயமைதுனம் செய்துமுடித்துவிட்டு.......!!!!

பாடப்புத்தகத்தை தவிர தமிழில் வேறு ஏதாவது புத்தகத்தை
படித்தால் நம்மை ஏதோ விசித்திர ஜந்து போல பார்க்கிறார்கள்......

தூக்கம்
             துன்பத்தை
                                துரத்துவது...!!!!!

என்னதான் TUBELIGHT , CFL LAMP , DECORATION LIGHT னு
கண்டுபிடிச்சாலும் இன்னும் லைட் எரியுதுனுதான் சொல்றாய்ங்க......????

தனது காதலியை நண்பன் தங்கச்சி என்றுதான் அறிமுகப்படுத்துகிறான்...!!!

விபச்சாரத்தையும் , விபச்சாரியையும் பற்றி தைரியமாக எழுதும் எழுத்தாளர்கள்
தங்களது மனைவியிடம் என்ன சொல்வார்கள்....???

அடியாட்களை இரக்கமின்றி கொன்று குவிக்கும் ஹீரோக்கள் ஏனோ
வில்லனை மன்னித்து விட்டு விடுகின்றனர்.........??????

சமீபத்திய கொடுமை : அடிவயிற்றில் மூத்திரத்துடன் ஒன் டூ ஒன் பேருந்தில் நான்கு மணி நேரப் பயணம் ...:-(

மானாட மயிலாடவில் 1 முதல் 8 வரையிலான எண்கள் பழுதாகிவிட்டன என்று நினைக்கிறேன் .........????

அதிசய ஒற்றுமை : கடற்கரை , பாலைவனம் இரண்டிலும் மணல்தான் ....!!!!

பின்சீட்டில் இருப்பவர் ஹாலிவுட் படத்தில் காமெடியனை தேடிக்கொண்டிருக்கிறார்.......!!!! # சினிமா தியேட்டர்

குழந்தைகளை யாரும் திருந்துவதற்காக அடிப்பதில்லை தங்கள்
ஆளுமையை வெளிப்படுத்தவே அடிக்கிறார்கள்....

கீர்த்தி , லஷ்மி , ஜோதி போன்ற பெயர்கள் திருநங்கைகளோ
ஆண் , பெண் இரண்டும் கலந்து உள்ளனவே ,.....!!!

போதை நன்றாக ஏறியவர்கள் சொல்வது ஒன்னுமே ஏறலை
இன்னொரு குவாட்டர் சொல்லேன்...........!!!!!!!

பள்ளிக்கூடம் நமக்கு கற்றுத்தந்த உருப்படியான விஷயம் எழுத்தை
வாசிக்க கற்றுத்தந்தது மட்டுமே.......!!!!!

ஆண்மை குறைவு விளம்பர போஸ்டர் ஒட்டியே நமக்கு ஆண்மைக்குறைவு
ஏற்பட்டுவிட்டது போல் உணரவைத்துவிட்டார்கள்,....#எங்கோ படித்தது..

புகை பிடிக்ககூடாது ,..புகையை யாராலும் பிடிக்க முடியாது வேண்டுமானால்
இழுத்துக்கொள்ளலாம் ....

வெளிப்பெண்களிடமே பேசியிராத ஆணுக்கு அக்கா , தங்கச்சி என்று நினைத்து
பேசினால் கூட நன்றாக தான் இருக்கும்,...!!!

காதலே கிடைக்காதவனுக்கு காதல் தோல்வி மட்டும் எப்படி கிடைக்கும் .
#டாட்

ஏமாறுவதைவிட தொலைப்பதை ஏற்றுக்கொள்வான் . # தமிழன்

பயத்தாலோ , என்னவோ புகார் கொடுக்க கூட காவல் நிலையம் செல்ல
நிறைய மக்கள் மறுக்கிறார்கள்...

புகார் செய்யப்பட்ட குற்றங்களே இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன்னும்
புகார் செய்யப்படாமல் எவ்வளவு உள்ளதோ,...

பேருந்தில் செல்லும் போது ஓசிப்பத்திரிக்கை வாங்கி படிக்காதவர்களே இருக்க முடியாது ,..!! #வாசிப்பு பழக்கம் இல்லாவிட்டாலும் .

அப்படி என்ன பேருந்தில் மட்டும் வாசிப்பு பழக்கம் தலைத்தூக்குகிறது...

டைப் அடிக்கும்போது எப்படி இருந்தாலும்  ஓப்பி அடித்துவிடுகிறது
#கட்டை விரல்

மடியில் லேப்டாப்புடன் ஆண்மை குறைவுக்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்தான் .

நாவலில் வர்ணித்தலின் மூலமே எண்பது சதவீதம் பக்கங்களை எழுதி விடுகின்றனர் ,..

நாத்திகவாதி பிரச்சினை வரும்போது மட்டும் ஒரு கணம் கடவுளை மனசுக்குள் வேண்டிக்கொள்கிறான்.

பேய் மூடநம்பிக்கை என்றால் கடவுளும் மூடநம்பிக்கை தானே,...

தீமித்திருவிழாவில் யாருடைய கால்களும் புண்ணாவதில்லை
# ஆச்சரியம்

இப்போது சிகரெட் பிடிக்கும் பெண்களின் ஆயாக்கள் சளைத்தவர்கள் அல்ல
சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள் ...!!!

பலாச்சுளை நழுவி பாலில் விழுந்தது ,...
யாரும் இந்த காம்பினேஷனே ட்ரை பண்ணி பார்த்ததில்லை

இப்போது இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்திருப்பார்கள்

சுகம் கொடுத்ததையே காலில் போட்டு மிதிக்கிறான் மனிதன் # சிகரெட்

எவ்வளவு பெரிய கவிஞனின் முதல் கவிதையும் காதல் கவிதையாகத்தான்
இருக்கும் # ஃபேக்ட்

கமலுக்கு வந்த பிரச்சினை இப்போது ரீலிசான் சண்டியர் படத்துக்கு வரவில்லையே ஏன்?

பசி கையில் காசு இல்லாதபோது வருவது ..


                                                                                             
கத்துக்குட்டி

No comments:

Post a Comment