விமர்சனங்கள்

                   சதுரங்க வேட்டை -விமர்சனம்

சதுரங்க வேட்டை வாழ்வதற்காக நடக்கும் வேட்டை . சதுரங்க வேட்டை தமிழில் வந்திருக்கும் ஒரு மற்றுமொரு வித்தியசமான கதைக்களம் . நட்டி
கதையின் நாயகனாக ஒரு நல்ல மற்றும் வித்திசயமான தேர்வு . தனது நடிப்பு
மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அவர் நம்மைக் கவர்கிறார் . படத்தின் மிகப்பெரிய பலமே படத்தின் வசனங்கள் தான் . என்னை படம் பார்க்கத்
தூண்டியதே படத்தின் ட்ரெய்லரில் வந்த வசனம் தான் . ஒவ்வொரு வசனமும்
ஆழமாகவும் , அறிவுத்தனமாகவும் உள்ளது . படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு தங்கள் பாத்திரத்திற்கு உயிர் சேர்த்துள்ளனர் . அதுவும் அந்த தூய தமிழ் பேசும் வில்லன் கதாபாத்திரம் அரசியல்வாதிகள் எப்படி தமிழ் பேசிக்கொண்டே நம்மை சுரண்டுகிறார்கள் என்பதை குறிப்பிடும்படி
அமைந்துள்ளதாகவே தோன்றுகிறது . படம் மொத்தமுமே வெவ்வேறு
விறுவிறுப்பான சம்பவங்களின் கோர்வைத் தான்  . நாம் கேள்விப்பட்ட
சம்பவங்களையே சலிப்படையச் செய்யாமல் விறுவிறுப்பாக கொண்டு
சென்றதே இயக்குனரின் வெற்றி. எனக்கு படத்தின் முதல் பாதியை பார்க்கும்
போது தவறு செய்வதை நியாயமாக சித்தரிக்கும் ஹீரோ தவறான பாதையில்
நம்மை கொண்டு செல்கிறதே என்று தோன்றினாலும் இரண்டாவது பாதியில்
அதை நிவர்த்திச் செய்கின்றனர் . ஹீரோவின் மனம் மாற சொல்லப்பட்ட காரணம் தான்  ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை . கடைசியில் ஹீரோயினை காப்பாற்றும் அந்த அடியாள் கேரக்டர்  நமது மனதில் நிற்கிறது .
அந்த அடியாளை நானும் நிறைய படத்தில் கவனித்து வருகிறேன் அவருக்கு
நல்ல ஆளுமை இருந்தாலும் எவரும் அவரை இன்னும் திறம்பட உபயோகப்படுத்தவில்லை என்று நினைக்க்கிறேன் இந்த படம் உட்பட .
படத்தின் பின்னணி இசை பரவாயில்ல ரகம் தான் . படத்தின் ஒளிப்பதிவு
குறிப்பிடும்படி உள்ளது . படத்தின் பிற்பாதியில் வரும் சில காட்சிகள் கிளிஷே
தனமாக உள்ளன . படத்தின் எடிட்டிங் அருமையாக உள்ளது . இயக்குனரின்
முழு ஆளுமையே வசனத்தில் தான் தெரிகிறது . படம் லோ பட்ஜெட்டில்
எடுக்கப்பட்டது என்பது சில காட்சிகளின் போது தெரிகிறது . இயக்குனர்
இன்னும் திரைக்கதையில் தனது ஆதிக்கத்தை செலுத்தினால் இன்னும்
பெரிய ஆளாக வளர முடியும் . சதுரங்க வேட்டை ஒரு நல்ல த்ரில்லர் நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கலாம் . இரட்டை அர்த்த வசனம் கிடையாது .

எனது மதிப்பெண் (7/10).
                                                               -கத்துக்குட்டி                                            




                                 ராமானுஜம் - திரைவிமர்சனம்

ராமானுஜம் - கிளாசிக். நான் ஏற்கனவே இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி
இப்படத்தின் ட்ரெய்லர் தான் என்னை இப்படத்தை பார்க்கும்படி தூண்டியது.
அதில் ஒரு வசனம் “இங்கு யாருக்கும் ஜீனியஸ் தேவையில்லை ,..எல்லா
பாடத்திலேயும் பாஸாகும் சராசரி மாணவன் தான் தேவை,....”.இந்தியாவில்
திறமைகள் இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலேயும் மிதிக்கப்பட்டு தான் வருகிறது என்பது படம் முழுக்க விரிகிறது,..இந்தியாவில்
திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காத அதுவும் ஒரு பிராமண இளைஞன்
என்ன செய்வான் அவனால் என்ன செய்ய முடியும் அழுவான் , அதேபோல்
தான் இப்படம் முழுக்க ராமானுஜம் அழுதுகொண்டேயிருக்கிறார் .
அங்கீகாரம் கிடைக்க போராடுகிறார் . திறமை எங்கிருந்தாலும் அது தானே
வெளிவரும் என்பது போல அவருக்கு அங்கீகாரமும் கிடைக்கிறது .
இதற்கிடைப்பட்ட ராமானுஜனின் போராட்டமும் , வலியும் தான் இப்படமே..
                                   
                                        இயக்குனருக்கு இக்கதையை தேர்ந்தெடுத்தற்கு கண்டிப்பாக ஒரு சல்யூட் .ஏனென்றால் இக்கதையில் அவர் பேசும் பல
விஷயங்கள் இக்காலத்திற்கும் ஏற்றப்படி இருக்கிறது.கதையின் ஆரம்பத்தில்
இருந்தே ராமானுஜனின் புகழை பாட ஆரம்பித்து விட்டனர் . அவர் ஆசிரியரிடம் கேட்கும் குறும்பு கேள்விகளும் அதை தொடர்ந்து வரும்
பாலக அத்தியாயங்களும் கலகலப்பாக நகர்கின்றன் . அந்த சிறுவனின்
நடிப்பில் இருந்த போலித்தன்மையை மட்டும் சரிசெய்திருந்தால் அந்த
பகுதிகள் இன்னும் கலகலப்பாக நகர்ந்திருக்கும். படத்தில் வரும் அனைத்து
கேரக்டர்களும் நியாயம் சேர்த்திருக்கின்றனர் . அப்பாஸுக்கு இன்னும்
கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .  படத்தில் ஹார்டியாக வருபவரின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது . அபிநய் ராமானுஜனாக
சரியான தேர்வு ...அவரது நடிப்பும் குறிப்பிடும்படி இருக்கிறது . ராமானுஜனாக
நடிக்க நிறைய உழைத்திருக்கிறார் என்பது நன்றாக இருக்கிறது . அந்த மனைவி கேரக்டரின் முகத்தில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஏக்கம் , தவிப்பு ,
மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் .
சுஹாசினி தனது அனுபவ பூர்வமான நடிப்பின் மூலம் கவர்கிறார் ..படத்தில்
வரும் அத்தனை கேரக்டர்களும் சுவாரஸ்யம் சேர்க்கின்றார் .

                                         படம் லோ - பட்ஜெட் படம் என்பது பல காட்சிகளில்
தெளிவாக தெரிகிறது . படத்தின் ஒளிப்பதிவு படத்தின் உணர்ச்சியை
பாதிக்கவில்லை என்றாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
பிண்ணனி இசை பரவாயில்லை ரகம் தான் . ராமானுஜத்தின் மேதாவித்தனத்தை நாம் ஒரு சில காட்சிகளிலே புரிந்துகொண்டாலும்
பிரச்சாரம் செய்வதைப் போல படம் நெடுக “அவர் புத்திசாலி” என்று
படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் கிளைமேக்ஸ் வரை சொல்லிக்
கொண்டே இருப்பது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது . படம் முழுக்க தெரியும்
நாடகத்தனத்தையும் ,  மிகை நடிப்பையும் சரிசெய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் .

                                            ஆனாலும் இயக்குனர் கிடைத்த கேப்பில் மூட நம்பிக்கை,
இரண்டாம் உலகப்போர் பிரச்சினைகள் , கல்விமுறை என தனது பார்வைகளை முன்வைத்துவிடுகிறார் . ராமானுஜத்தின் வாழ்க்கையை
சரியான காட்சிகளின் மூலம் தொகுத்து தந்திருக்கிறார் . எப்போதாவது
வரும் நகைச்சுவைகாட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது . படத்தின் காஸ்ட்யூம்
மற்றும் கலைவடிவமைப்பு அருமையாக உள்ளது . அந்த காலகட்டத்தை
நம்மை உணரவைக்கிறது..

                                              படம் முடிந்து வரும் பொழுது நமது மனத்தில் ,..”ச்சே ,..
இவ்வளவு பெரிய ஜீனியஸ்ஸ அங்கீகரிக்க மறந்துட்டோமே...” என்ற எண்ணம் அனைவரிடத்திலும் தோன்றுகிறது . அந்த இடத்தில் டைரக்டர் ஞான ராஜசேகரன் வெற்றிப் பெறுகிறார்,...

                                                                                                         -கத்துக்குட்டி
                        





                                 அரிமா நம்பி-விமர்சனம்
தமிழ் சினிமாவில் டெக்னாலஜியை  பயன்படுத்தி ஒரு த்ரில்லர்.......
அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஒரு புது களத்தை பிடித்ததில்
கவனம் ஈர்த்திருக்கிறார்..படத்தின் ஆரம்ப காட்சிகள் பார்த்து பழகியது
போல் உள்ளதால் சலிப்பை ஏற்படித்துகின்றன ...அதனால் படத்தினுடன்
ஒட்ட நமக்கு நேரம் பிடிக்கிறது.... படத்தின் புது புது ஐடியாக்கள்
நம்மை அடப் போட வைக்கின்றன..... ட்ரம்ஸ் சிவ மணி யின் பாடல்கள்
எழுந்து போக வைக்கின்றன..... பின்னணி இசை பரவாயில்லை......
என்னதான் படம் விறுவிறுப்பாக சென்றாலும் அதன் நீளம் நம்மை
கொட்டாய் விட வைக்கிறது........தமிழ்நாடு போலிஸீசிடம் இவ்வளவு
டெக்னாலஜி இருக்கிறதா என அவர்களே ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு
காட்சி அமைப்பு நம்மை யோசிக்க வைக்கிறது..............
அப்பா செத்த பிறகும் கூட பிரியா ஆனந்திடம் எவ்வித ரியாக்‌ஷனும்
பெரிதாக இல்லை....................இப்போல்லாம் என்னன்ன தெரியல
எந்த படமா இருந்தாலும் அதோட ட்விஸ்ட் நம்ப இசியா
கணிக்கறமாதிரி தான் இருக்கு இந்த படத்துலயும்..... படத்துக்கு
கூடுதல் கவனம் சேர்க்கறதே படத்தின் அடியாட்கள் தான்   லோக்கல்
ரவுடியுல இருந்து ஹை-டெக் ரவுடிகள் வரைக்கும் வரும் காட்சிகளில்
எல்லாம் அசர வைக்கிறார்கள்.....வில்லன் பரவாயில்லை.................
படத்தின் கேமராமேன் ராஜசேகருக்குதான் முழு கிரெடிட்டும் படத்தை
மொத்தமும் தன் தோளில் தாங்கியிருக்கிறார்...........விக்ரம் பிரபு புத்திசாலி
இளைஞன் கேரக்டருக்கு நன்றாக சூட் ஆகிறார்..........

                                      நல்ல விறுவிறுப்பான கதையை.. கொஞ்சம் நீளத்துடன்
கொடுத்திருக்கிறார்கள்...இந்த த்ரில்லரை நிச்சயமாக தியேட்டரில் சென்று
ரசிக்கலாம்.............................
                                எனது மதிப்பெண்    (5.5/10).......
                                                                    -கத்துக்குட்டி                                   

                                 
                               
                                   

                                      EK VILLAIN -விமர்சனம்
நான் இதுவரை நேரடி ஹிந்தி படங்களை  தியேட்டரில் சென்று பார்த்ததில்லை
ஆனால் இப்படத்தின் பாடல் பிடித்திருந்ததாலும் என் தம்பி இப்படத்தை
தியேட்டரில்  பார்த்துவிட்டாதாலும் இரண்டு நண்பர்களை சேர்த்துக்கொண்டு
120 ரூபாய் டிக்கெட்டில் ஐனாக்சில் பார்க்கச் சென்றேன்.என்ன கொடுமை
-யென்றால் சப்-டைட்டில் இல்லை.
                          படம் போடுவதற்கு முன்பு போட்ட விளம்பரம்,டிரெய்லர்
எல்லாமே ஹிந்தியில் தான்.சுத்தியும் ஹிந்திகாரங்களா உக்காந்திருக்கானுங்க
ட்ரெய்லர்ல வர காமெடிக்கு கூட சிரிக்க ஆரம்பிச்சாட்டுனுங்க.அப்படியே
கொஞ்சம் shy யா போச்சு.படம் புரியுமா இல்ல புரியாதானு வேற doubt
வந்துருச்சு.இதெல்லாம் படம் போடற வரைக்கும் தான் ...அதுக்கப்புறம்
அது நம்மள அப்படியே உள்ள இழுத்துட்டு போயிடுச்சு.
                        நான் ஒன்னும் இது கிளாசிக்குனு சொல்ல வரலை.ஆனா
திரில்லரையும் ,காதலையும் நல்லா கொடுத்திருக்காங்க.  ஃபர்ஸ்ட்
ஆஃப் சூப்பர்,செகண்ட் ஆஃப் கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்லா இருக்கும்.
இயக்குனர் மஹித் சுரி cinemotography,making,BGM,music ல நல்ல
கவனம் எடுத்து பண்ணிருக்காரு.படம் நமக்கு ஒரு நல்ல rich லுக்
தருது.சித்தார்த் படம் முழுக்க கோபமாவே வரதுல ஒரு புது style
தெரியுது.ஒரு காட்சில சித்தார்த் ஒரே ஷாட்ல வர அத்தனை ரவுடிங்களையும்
அடிக்கிற மாதிரி காட்டீருபாங்க அது இயக்குனரோட craeative க்கு
ஒரு சின்ன சாம்பிள்.
                                              நான் படத்துக்கு செல்லமுக்கிய காரணமே shredha
kapoor தான். கலியான் பாடலின் promo வீடீயோவில் அவர் கொடுக்கும்
ரியாக்‌ஷன்கள் அத்தனையும் அவ்வளவு அழகு.அவர் இறந்து விடுவார் என்று
நமக்கு முன்பே தெரிந்துவிட்டாலும் அவர் வரும் காட்சிகளிலெல்லாம்
நம் கண்ணை அவர் மேல் இருந்து எடுக்கமுடியவில்லை அத்தனை
குறும்பும்,ஈர்ப்பும் அவரிடத்தில் உள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய
பலம் அதன் பாடல்கள்தான். கலியான் பாடல் இந்த கட்டுரை எழுதும்
நேரத்தில் கூட முனுமுனுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
                                             படத்தின் கிளைமாக்ஸ் நாம் எதிர்பார்த்தது போலவே
இருந்தாலும் ஏனோ உறுத்துகிறது. ரித்தேஷ் தேஷ்முக் தன் பணியை சரியாக
செய்திருக்கிறார்.இந்த சீரியல் கில்லர் பாணி படம் ஹாலிவுட்டில் நிறையப்
பார்த்திருந்தாலும் ரசிக்கும்படியாக தான் எடுத்துருக்கின்றனர்.இண்டர்வல்
காட்சியில் ஹீரோயிசம் கைதட்ட வைக்கின்றது.மொத்தமாக படம் ஒரு
நல்ல ரொமான்ஸ் த்ரில்லர்...
                        எனது மதிப்பெண்    (07/10)
                                                                                         -கத்துக்குட்டி

                                                                    

No comments:

Post a Comment