குறுங்கதைகள்

                                               கடமை
அர்ஜுன் தனது ஆட்டை கூட்டிக்கொண்டு நடக்க தொடங்கினான் . நடந்தான் , நடந்தான் , நடந்தான் 21 நாட்கள் நடந்தான் , பத்தாம் நாளே அவனது ஆடு இறந்துபோயிருந்தது . இருந்தும் நடந்தான் , நடந்தான் , நடந்தான் 201 வது நாள் தனது கல்லறையை அடையும் வரை நடந்தான் .
                                                                                    -கத்துகுட்டிஅதிகாலை நேரம் சூரியன் விஸ்வரூபத்தை எடுக்கும் முன் தனது மெல்லிய
இளஞ்சிவப்பு கதிர்களை முன்னோட்டமாக வீசிக்கொண்டிருந்தான் . ப்ரியா  அந்த மலை உச்சி மீது நின்று கொண்டு அப்பனிப்படர்ந்த மலைப்பிரதேசத்தின்
அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் . இரண்டு கப் சூடான காபியை கொண்டு வந்த அர்ஜுன் ப்ரியாவிடம் கொடுத்தான் . இருவரும் அதை குடிக்கத் தொடங்கினர் .
இதுவரை தோழியாக இருந்த ப்ரியாவிடம் தனது காதலைச் சொல்ல அர்ஜுன் எத்தனித்தான் .
ப்ரியா
“ஆங்....சொல்லு “
உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்
“அதான் ...சொல்லுனு சொன்னன்லே ..”
இல்ல நீ அதை தப்பா எடுத்துக்க கூடாது
“தப்பா எடுத்துக்கற மாதிரி இருந்தா ...ஏன் சொல்ற ..சொல்லாதே ..”
நான் கண்டிப்பா அதை சொல்லியே ஆகணும் இனிமே அதை என்னாலே தாங்கிக்க முடியாது
”அப்ப சொல்லு...தப்பா , இல்லையானு நான் முடிவு பண்ணிக்கிறேன் “
அர்ஜுன் பெரும் தயக்கத்துடன் , நாக்கு உளற . இதய துடிப்பு அதிகரிக்க சொல்லி முடித்துவிட்டான் .
"I LOVE YOU "
                ப்ரியா அதிர்ச்சியடைந்தவளாய் அவனது கண்ணையே உற்று நோக்கினாள் . அவனும் செய்வதறியாது உள்ளுர பதறினான் . அவளது கண்களில்
இருந்த அதிர்ச்சி மெல்ல மெல்ல மலர்ந்தது . தனது காதலை வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியாமல் அவனை இறுக அணைத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடத் தொடங்கினாள் . மெல்லிய இசை காற்றோடு கலந்து வந்தது..............
.
.
.
.
கட்
.
.
.
.
.
ஷாட் ஓ.கே
.
.
.
.
.
.
பேக்கப் .
                                                                        -கத்துக்குட்டி
   கதை எழுதுபவன் கதை எழுத ஆரம்பித்தான் . கதை கிடைக்காததால் காப்பியடித்து கதை எழுதிவிட்டான் . அக்கதையை அனைவரிடமும் படிக்கக் கொடுத்தான் .
முதலாமானவன் - செம கதை , அருமையா இருக்கு ,...
இரண்டாமானவன் - சூப்பரா இருக்கு ,.
மூன்றாமானவன் - கதை நல்லா இருக்கு , ஆனா எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு.
நான்காமானவன் - எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு ,...
ஐந்தாமானவன் - எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு ,...
ஆறாதானவன் - ஏய்,...இது ராம்ஷிண்டே எழுதுன “என் கிளைகள்ல “ வர்ற கதைதானே,..
                         கதை எழுதுபவன் அசிங்கப்பட்டு கதை எழுதுவதையே விட்டுவிட்டான் .
(பின்குறிப்பு : மேலே உள்ள கதை காப்பியடிக்கப்பட்டதாக கூட இருக்கலாம்)
                                                                           -கத்துக்குட்டி
                                                                                                                                                                                                  கட்

அர்ஜுனுக்கு சிறுவயதுதான் என்றாலும் ரொம்ப நாட்களாக கார்ரேசில்
பங்கேற்று வருகிறான் . இத்தனை நாட்களாக பங்கேற்று வந்தாலும் அவன்
இதுவரை வெற்றியை ருசித்ததேயில்லை . அன்று அவனுக்கு தனது ஸ்பான்சர் மூலம் கிடைத்த புது ரெட் ஃபெராரியில் தனது ரேசில் களமிறங்கினான் . ஐந்து
லேப் களை கொண்ட அந்த ரேசில் முதல் மூன்று லேப்களில் மூன்றாம் இடத்தை
தக்கவைத்துக்கொண்டு இருந்தான் . நான்காவது லேப்பின் ஆரம்பத்தில் ரேஸ் தளவாடத்தை சுற்றி போடப்பட்டிருந்த தடுப்பின் மீது எதிர்பாராதவிதமாக இடித்து இரண்டு மூன்று தடவை நிலை தடுமாறி தனது நிலைக்கு வந்தான் .  அதற்குள் அனைவரும் அவனை முன்னேறி போயிருந்தனர் . சைலன்சர் வேறு அடிபட்டு புகைந்துகொண்டிருந்தது . தீடிரென்று ஆக்ரோஷம் வந்தவனாய் இன்ஜினை ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கினான் . ஒவ்வொருவராக முன்னேறி கொண்டே சென்றான் . ஆறு , ஐந்து , நாலு , மூன்று , இரண்டு , ஒன்று என முன்னேறி முதல் இடத்தில் சென்று கொண்டிருந்தான் . கடைசி லேப்பின் வெற்றிக்கோட்டை மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தான் கரண்ட் கட்டானது .

                                                                                           -கத்துக்குட்டி                                       
                                                               22 வது

ப்ரியா அந்த ஒண்ணரை மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 21 பேருடன்
புணர்ந்திருந்தாள் . ஆனாலும் 22 வது ஆளை புணர தேடிக்கொண்டிருந்தாள் .
எவனும் கிடைக்காததால் ரோட்டில் சென்று வருவோர் போவோரையெல்லாம்
உறவுக்கு அழைத்துக்கொண்டிருந்தாள் . எல்லோரையும் முத்தமிடத் தொடங்கினாள் சிலரது ஆசனவாயில் கூட வாய் வைத்து பார்த்தாள் எவரும்
ஒத்துழைக்கவில்லை . கடைசியாக சாலையோரம் படுத்துகிடந்த ஒரு வயதான சொறி பிடித்த கிழத்திடம் தனது ஆசையை தீர்த்துக்கொள்ளலாம் என அவரை நெருங்கினாள் . நல்லவேளை வாக்கிங் முடித்துவிட்டு வந்த அவளது முதலாளி
அவளை கயிற்றில் கட்டி கூட்டி சென்றார் .............

                                                                                      -கத்துக்குட்டி                                                                                                            கடிதம்
நலம் , நலமறிய ஆவல் ,நாங்கள் இங்கு நலம் , நீ அங்கு நலமா,....
அப்பாவுக்கு மூன்று நாளாக காய்ச்சல் அதோடு நேற்றிலிருந்து பேதியும் சேர்ந்துக்
கொண்டது . சுகர் இருப்பதால் கை , கால்கள் வேறு வீங்கி விட்டது மருத்துவ செலவாக இரண்டாயிரம் ரூபாய் செலவாகிவிட்டது . உன் தம்பி நண்பர்களோடு
சேர்ந்து குற்றாலம் சென்று வரும் வழியில் பைக்கில் இருந்து கீழே விழுந்து இரண்டு பற்களை உடைத்துக்கொண்டான் .இரண்டு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தான் கிடக்கிறான் . மறுபடியும் மாப்பிள்ளை வரதட்சணை கேட்டு அக்காவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் , ஒரு வாரத்திற்குள் இருபதானாயிரம் ரூபாய் கேட்கிறார் முடிந்தவரை சீக்கிரம் அனுப்பி வைக்கவும் . நமது இரண்டு பசுக்களும் தீடிரென்று மூன்று நாட்களுக்கு முன்பு கொள்ளை நோய் வந்துஇறந்து போய்விட்டன . அதனால் வீடே வெறிச்சோடிப் போய் உள்ளது .மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடு முழுவதும் ஒழுகிக் கொண்டிருந்தது .அதை சரிசெய்ய வேற ஆயிரம் ருபாய் செலவாகும் போல் உள்ளது . அப்புறம் ,..என் தாலி செயின் வேற அடகுல மூழ்கிரும் போல இருக்குப்பா அதுக்கு ஒரு அஞ்சாயிரம் அனுப்புப்பா . சரி வேலை வேலைனு சுத்தாம ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிட்டு நிம்மதியா இருப்பா . உடம்ப பத்திரமா பாத்துக்க.
                                                    சுபம்
                                                                     இப்படிக்கு அன்புடன்
                                                                                                             அம்மா
(அடங் கொய்யால ....!!!இதப் படிச்சுட்டு எவனால நிம்மதியா இருக்கமுடியும்
இதுல நலம் நலமறிய ஆவல் வேற ,...பாவம்யா  அந்த பையன்,...)(கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் )

                                         ஆச்சாரம்
அந்த அக்ரஹாரம் மிகவும் ஆச்சாரமானது . அந்த மூன்று பேரும் ஒரே நாளில்
பிறந்தவர்கள் . அதனால் இயல்பாகவே அவர்கள் நண்பர்கள் ஆனார்கள் . சிறு
வயதில் இருந்தே ஒன்றாகவே எதையும் செய்வனர் . பதின்ம வயதை அடைந்தவுடன் மூவரும் செக்ஸை பற்றி தெரிந்து கொள்ளத் தொடங்கினர்.
மூவரும் சேர்ந்து அதை பற்றியே பேசினர் . மூவரும் ஒரே இடத்தில் படித்து ,
ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரே நேரத்தில் முதல் மாத சம்பளத்தை
வாங்கினார் . மூவரும் சேர்ந்து முதல் வேலையாக ஒரு மேட்டர் வீட்டுக்குச்
சென்றனர் . மூவரும் இதில் மட்டும் ஒருவர் பின் ஒருவராக செல்வதாக முடிவானது . முதலாமானவன் அவளது யோனியை பார்த்தவுடனேயே
கக்கிவிட்டான் . இரண்டாமானவன் சரியாக அவளது யோனியில்
செருகும் சமயத்தில் கக்கிவிட்டான் . மூன்றாமானவன் மட்டும் வெவ்வேறு
பொசிஷன்களில் கிட்டதட்ட முக்கால் மணி நேரம் இயங்கிவிட்டு கடைசியாக
கக்கிவிட்டு வந்தான் ......வெளியே வந்தவுடன் இருவரும் ஆச்சரியமாக
அவனிடம் கேட்டனர்,...
                  “டேய் ,..எப்படிடா,........”
அவன் சிரித்தபடியே தன் பையிலிருந்த வாழைப்பழத்தை எடுத்துக் காட்டினான்,...

                                                                -கத்துக்குட்டி                                             
                                                 ரேடியோ                            
                             
                ஒரு முக்கிய அறிவிப்பு விண்வெளியை ஆராய்வதற்காக நமது
விஞ்ஞானிகள் அனுப்பிய INEV 21 வெறறிகரமாக தனது பாதையை அடைந்தது.

                    INEV 21 ஒளியின் வேகத்தை விட நூறு மடங்கு வேகமாக செல்ல
கூடியது . அது பால்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் தொடர்ந்து
ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறது.

                    இது வரை வந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது கிரகத்தை 
  தவிர வேறு எந்த கிரகத்திலும்  உயிரினங்கள் கண்டறியப்படவில்லை,.

                    ஒரு ஆச்சரியமூட்டும் அறிவிப்பு ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான ஆதாரம் நம்பும்படி கிடைத்துள்ளது,..அங்கிருந்து ஒரு உயிர்சாம்பிளை எடுத்துக்கொண்டு INEV 21 நமது கிரகத்திற்கு திரும்புகிறது,.

                    INEV 21 கொண்டு வந்த உயிர்சாம்பிள் ஆனது பாதுகாப்பான ஒரு
கண்ணாடிபேழையில் அடைக்கப்பட்டுள்ளது . அது பார்க்கவே மிக விசித்திரமாக உள்ளது  . அது தனது மார்பை உள்ளேயும் , வெளியேயும் இழுத்துக்கொண்டு இருக்கிறது . அதற்கு இரண்டு கைகள் , இரண்டு கால்கள்
ஒரு தலை , இரண்டு கண்கள் , இரண்டு காதுகள் , ஒரு மூக்கு , ஒரு வாய் என
பார்க்கவே அசிங்கமாகவும் , குமட்டும்படியாகவும் , அறுவறுப்பாகவும்
உள்ளது . அதை வைத்து நமது விஞ்ஞானிகள் மேலும் பல ஆராய்ச்சிகள்
செய்ய உள்ளனர் .

                                             நன்றி
                   மறுஒளிப்பரப்பு மாலை 82.35 மணிக்கு .

                                                                                         -கத்துக்குட்டி 
                                                                                                  500 ரூபாய்
அர்ஜுன் எப்போது பயணம் செய்தாலும் ரிசர்வ் செய்துதான் செல்வான்,....
ஆனால் அன்று அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் அங்கு சென்று
எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கு சென்றான்,..
இந்த இடத்தில் அர்ஜுனை பற்றி அவனுக்கு சூதுவாது எதுவுமே தெரியாது,..
எவன் எதை சொன்னாலும் அவன் நம்பி விடுவான்,...

                                       பஸ்ஸ்டாண்டில் சென்று சென்னைக்கான கட்டணத்தை
விசாரித்தப்பொழுது எல்லோரும் 1200 ரூபாய் என்று சொன்னார்கள்,..ஆனால் இவனிடம் இருந்ததோ வெறும் 500 ரூபாய் . கடைசியில் ஒரு பஸ்காரன்  1000
ரூபாய் கேட்டான்,...இவன் தன்னிடம் வெறும் 500 தான் உள்ளது என்று 500 ரூபாய் நோட்டை எடுத்துக் காண்பித்தான்,..அவன் சிறிது சலித்தப்படியே பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தான் ,...அர்ஜுன் அவருக்கு
நன்றி சொல்லியபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து நிம்மதி பெருமூச்சு
விட்டான்.பஸ்காரனின் பெருந்தன்மையை மனசுக்குள் மெச்சிக் கொண்டான்.
அருகில் இருந்தவரிடம் எவ்வளவு டிக்கெட் என்று கேட்டான்.அதை ஏன் தம்பி
கேட்கீறீங்க முன்னூறு ரூவா புடுங்கிட்டான் படுபாவி பய என்றார் . தான் ஏமாந்ததை எண்ணி மனம் நொந்தப்படியே தூங்கிப்போனான் ....கதை ஆசிரியனான எனக்கு எண்ண நிம்மதி என்றால் அவன் பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாயை நிஜமாகவே அவன் மறந்து போயிருந்தது தான்,...

                                                                    -கத்துக்குட்டி                                                                                                               பாரிஸ்


பாரிசிலிருந்து அர்ஜுன் வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தான் . தன் நண்பர்களை பார்க்கப் போகும் மகிழ்ச்சியில்
அவர்களுக்குகாக தான் வாங்கி வைத்திருந்த செண்ட் , சரக்கு பாட்டில் , சோப்பு
வாட்ச் , ஆகியவற்றை தனது சூட்கேசில் அடுக்கத்தொடங்கினான் . .................
...................................................................................................................
..............................................................................................ஊருக்கு வந்து
தன் நண்பர்களுடன் சரக்கு அடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் நண்பன் கேட்டான் மச்சான் பயணம் எப்படி இருந்தது என்று ,...............”அதுவா,..
கோயம்பேட்டுல K.P.N பஸ் ஏறுனன்டா ஆறே மணி நேரம்   படுத்துட்டே
வந்துட்டேன் வந்த அலுப்பே தெரியல,...”
                                                                            -கத்துக்குட்டி
                                                                                                                                                                                              ரவுடி

அர்ஜுன் பிறந்தபொழுது மிக அழகாக இருப்பான்,..அதனால் அந்த ஏரியாக்காரர்கள் அனைவருக்கும் அவன்தான் செல்லப்பிள்ளை,.அவனை
எல்லோரும் தங்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்று கொஞ்சுவார்கள்,...அவன் தன்
தாயிடம் இருந்த நாட்களை விட மற்றவர்கள் வீட்டில் இருந்ததுதான் அதிகம் ,...
பள்ளிக்குழந்தைகள் கூட பள்ளி முடிந்தவுடன் இவனை கொஞ்ச நேராக இவனைத் தேடித்தான் வருவார்கள்,....இவன் அந்த ஏரியாவையே ஒரு
இளவரசன் போல அலங்கரித்துவந்தான்,....ஆனால் இவன் வளர வளர இவனது
குறும்புகளும் , சேட்டைகளும் அதிகரித்ததால் அந்த ஏரியா மக்கள் இவனை
வெறுக்கத் தொடங்கினார்,....இவனை பார்த்தாலே அஞ்சி ஒதுங்கினர்,...
அந்த பயம் அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்துப்போனதால் பெரியவர் , குழந்தைகள்
என பேதம் பார்க்காமல் அனைவரையும் பயமுறுத்தத் தொடங்கினான்,....எந்த
கடைக்கு சென்றாலும் யாரையும் மதிக்காமல் எடுத்து தின்றுவிட்டு திமிராக
செல்வான்,....இவனைப் பார்த்து இவனை மாதிரியே உள்ள நான்கைந்து பேர்
இவனுடன் சேர்ந்து கொண்டனர்,..தனது கூட்டத்தின் மூலம் அந்த ஏரியாவையே
பயமுறுத்தி வந்தான்,...இப்படி சுத்திக்கொண்டிருந்தவன் தீடிரென்று வெறிபிடித்து ஊர்மக்களை கடித்து குதற ஆரம்பித்தான்,,,..நாய் பிடிக்கும் வேன்
வந்து அவனை பிடித்துச் சென்றது,.....

                                                                                             -கத்துக்குட்டி  (இந்த பதிவு கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே,,
சிறுவர்கள் மீறி பார்த்தால் தண்டனைக்கு உட்பட்டது,,,,,,,,,,,,,)
       (கத்துக்குட்டி : பாத்துக்கங்க ,..என்ன தெரியவா போகுது,..)

ப்ரியா அன்று அவசர அவசரமாக ஆபிஸ் வேலைகளை முடித்துவிட்டு
சீக்கிரமாக கிளம்பினாள்,...அறைக்கதவை தட்டினாள்,,டொக்,...டொக்,..
கதவு திறந்தவுடன் சிறிதும் தாமதிக்காமல் மேலே பாய்ந்து கண்டபடி
முத்தமிட தொடங்கினாள்,...மார்பு , கன்னம் , புட்டம் என எல்லா இடங்களிலும்
தனது வாயால் நக்கினாள்,....தனது பல்லாலேயே மேலாடை  , ஜட்டி ஆகியவற்றை  கழட்டி தூக்கி எறிந்தாள்,... உச்சத்தை அடையும் நிலையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டாள்........................,...நாக்கால் மர்ம உறுப்பை வெறி பிடித்தவள் போல நக்கத் தொடங்கினாள்,....

                             படீரென்று கதவைத் திறந்து கொண்டு லேடீஸ் ஹாஸ்டல்
வார்டன் உள்ளே நுழைந்தார்,........,....

                                                                          -கத்துக்குட்டி

                                                                               தற்கொலை

அர்ஜுன் தனது கைக்குட்டையை எடுத்து இரு பக்கமும் நன்றாக துடைத்துவிட்டு ,.........தண்டவாளத்தின் மீது வாட்டமாக படுத்துக் கொண்டான்,,,....தண்டவாளத்தின் மீது படுத்துக் கொண்டு தான் இதுவரை வாங்கியிருந்த கடன்களைப் பற்றி நினைக்க தொடங்கினான்,..........................
கிரெடிட் கார்டு லோன் ,
ஹோம் லோன் ,
பைக் லோன்,
எஜுகேசனல் லோன் ,
கல்யாணக் கடன் ,
மருத்துவக் கடன் ,
டூர் கடன்,
சரக்கு அடிக்க வாங்கிய கடன் ,
லவ் கிஃப்ட் கடன் ,
டாக் டைம் லோன் ,
நண்பனிடம் வாங்கிய பேனா , பென்சில் கடன் ,
பாட்டியிடம் வாங்கிய மிட்டாய் கடன் ,
ஒண்ணாவது நண்பனிடம் வாங்கிய ஒரு ரூபாய் கடன்,
        இப்படி அவன் வாங்கிய எல்லாக் கடனும் அவன் கண்முன்னேத் தோன்றியது . இவ்வளவு கடன்களை வாங்கிக் கொண்டு உயிருடன் வாழ்வதா
சாவதே மேல் என்று எண்ணி தண்டவாளத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன்
படுத்திருந்தான்,....பாண்டியன் எக்ஸ்பிரஸ் அவன் மீது மோதும் சமயத்தில்
அவன் கரண்ட் பில் கட்டாததால் , அதனால் ஃபேன் ஓடாததால் , அதனால்
கொசு கடித்ததால் கடைசி நிமிடத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டான்,,,................முதல் வேலையாக நண்பனுக்கு செலுத்தவேண்டிய 10 ரூபாய் டாக்டைம் கடனை  அந்நள்ளிரவில்
அடைத்தான்,..........
 
                                                                                        -கத்துக்குட்டி
                    
                                                          
                                                          சேஃப்டி
ப்ரியா எல்லா பெண்களைப் போலவே பாதுகாப்பு உணர்வு அதிகம் உள்ளவள்.
அன்று தேர்வு அவளது pouch யில் அடுக்கத் தொடங்கினாள்..
பென்சில் - 3
ப்ளூ பென் - 3
ஸ்கேல் பெரியது - 1
ஸ்கேல் சின்னது - 2
ப்ளாக் பென் -3
ரப்பர் - 3
ஷார்ப்பனர் - 2
ஸ்டிக் பென் ஆரஞ்சு - 1
ஸ்டிக் பென் வயலெட் - 1
ஸ்டிக் பென் மெரூன் - 1
ரப்பர் பேண்ட் - 4
        இந்த இடத்தில் கதையின் ஆசிரியரான  நானே எரிச்சலாகி அவளிடம் கேட்டேன் எதுக்கு இத்தனை எடுத்துப் போற,......
                                “எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான் தீடிர்னு ஏதாச்சும் ஒன்னு
எழுதாம போயிட்டாலோ,,தொலைஞ்சுபோயிட்டாலோ என்ன பண்றது,,,......”
                   சரி,........pouch யோட காணாமப் போச்சுனு என்ன பண்ணுவ,....
                       “நான் என்ன லூசா,.... அதான் எல்லாத்துலயும் ஒவ்வொரு செட்டு
பக்கத்துல இருக்கற பொண்ணுக்கிட்ட கொடுத்து வச்சிருக்கேனே,.............”

                                                                                              -கத்துக்குட்டி
                                                    


                                                         முதலாளி

எனது முதலாளி மிகப்பெரிய செல்வந்தர்...என்னை நன்றாக கவனித்துக்
கொள்வார்,....அவருக்கு எப்போதும் நான் ஸ்பைடர்மேன் உடை அணிந்து
கொள்வதுதான்பிடித்திருக்கிறது,...அவருக்கு பிடித்துள்ள காரணத்தால் நானும் அதைப்பெரிதாக பொருட்படுத்தவில்லை...எனக்கு அவர் மேல் மனக்குறையே வந்தது இல்லை அந்த சம்பவம் நடக்கும் வரை,..ஆம்,...அவர் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ,... என்னால் கனவிலும் நினைத்து பார்க்க
முடியாத பேரழகியை எனக்கு மணப்பெண்ணாகப் பார்த்தார்..திருமணம்
ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன,...அதை பார்க்க பார்க்க எனது
முதலாளியை நினைத்து எனக்கு கர்வம் ஏற்பட்டது,...கல்யாண நாள்
அன்று எனது முதலாளியின் நண்பர்கள் என்னை வாழ்த்த வந்த வண்ணம்
இருந்தனர்,,..சரியாக தாலி கட்டும் சமயத்தில் எனது முதலாளி தாலியை
வாங்கிக் எனது மனைவிக்கு கட்டிவிட்டு எங்களுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதாக சொன்னார்,,..இதை கூடியிருந்தவர்களும் ஏற்றுக்கொண்டு
அட்சதை தூவிவிட்டு சென்றனர்,..எனது மனைவிகூட ஒன்றும் சொல்லவில்லை
எனக்கு நடப்பது எதுவும் புரியவில்லை,...பிறகு சிறிது நேரம் புலம்பிவிட்டு
முதலாளியை எதிர்த்துக் கேட்க முடியாததால் அவளுடன் சேர்ந்து வாழ
ஆரம்பித்தேன்............-பொம்மைக் கல்யாணம்-.....

                                                                       -கத்துக்குட்டி                                               


                                                         கொலை

அர்ஜுன் அன்றுதான் தான் இதுவரை செய்த உயிர்க்கொலைகளை எண்ணி மனம்
வருந்தத் தொடங்கினான்..........தூ .......வெறும் பணத்துக்காகவா ஈவு ,
இரக்கமில்லாமல் இத்தனை உயிர்களை வெட்டிச் சாய்த்தேன்....என்னால்
எத்தனையோ குடும்பங்கள் நிம்மதியின்றி , உரக்கமின்றி தவித்திருக்குமே
அந்த பாவ பணத்திலா இந்த உடம்பை வளர்த்தேன் .....தன்னை நினைக்க
நினைக்க அவனுக்கு அவன் மீதே வெறுப்பு ஏற்பட்டது ..பிறகு தீர்க்கமான
முடிவெடுத்தவனாய் தன் பாவங்களுக்கு பிரயச்சித்தம் தேட எண்ணினான்...
தெருவில் தனியொரு மனிதனாக நின்று போராடத் தொடங்கினான்....
              “வெட்டாதீர் , வெட்டாதீர் , மரங்களை வெட்டாதீர் , ........”

(கத்துக்குட்டி : எந்த ஒரு பெரிய போரட்டாமும் தனி மனிதனில் இருந்து தான்
தொடங்குகிறது........)
                                                                                     -கத்துக்குட்டி
                       
                                                 
                                           

                                                     ஹிரோயின்

பாக்தாத் நகரில்  படைத்தளபதியான நமது ஹீரோவும்,, நாட்டின்
இளவரசியான நமது ஹீரோயினும் காதல் செய்துக்கொண்டிருந்தனர்....
...............நாட்டின் அரசர் ஒரு போட்டி வைத்து அதில் ஜெயிப்பவர்க்கே
தனது மகளை கட்டிவைப்பதாக அறிவித்தார்.........அலாவுதீன் படத்தில்
வருவது போல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்வது என முடிவானது
.....அனைவரும் எதிர்ப்பார்த்தாற் போல் , சொல்லிவைத்தாற் போல், ,,
வழக்கம் போல்..,, ஹீரோ வெற்றிப் பெற்றுவிட்டார்..என்று நான் எழுதிக்
கொண்டிருக்கும் போது கடைசி நிமிடத்தில் வில்லன் விட்ட ஒரு குத்தில்
ஹீரோ மூர்ச்சையடைந்து கீழே விழுந்ததால் வில்லன் வெற்றிபெற்றான்.
..மன்னனின் வாக்குப்படி வில்லனுக்கும் , ஹீரோயினுக்கும் கோலாகலமாக
திருமணம் நடைப்பெற்றது,,,, நடைப்பெற்ற கையோடு இருவரும்
முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் ,,,,,... முதலிரவு முடிந்து வில்லன்
அம்மணமாக அன்று அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தப்போது
ஹீரோயினை காணவில்லை ......
                           (அதே நேரத்தில்.....)
                                    ஹீரோவும் , ஹீரோயினும் ஒரே குதிரையில் நாட்டைக்
கடந்து சென்று கொண்டிருந்தனர்........

(கத்துகுட்டி கருத்து ;  1 )ஏண்டா டேய் மன்னா ..ஒனக்கு போர் அடிச்ச ஏதாச்சும்
                                           _______படம் பாத்துட்டு மூடிட்டு இருக்க 
                                             வேண்டிதுதானே. அதென்ன பொண்ண வச்சு
                                             விளையாடுறது.... 
                                        2)ஏண்டா ஹீரோ உனக்கு சத்தே இல்ல அப்ப என்ன
                                             மயித்துக்கு லவ் பண்ற....
                                         3) ஏண்டா ஹீரோதான் ஜெயிக்கணும்னு ஒரு காமன்
                                               சென்ஸ் இல்லாம ஜெயிச்சுட்டு  இப்ப ஹீரோயின
                                                ஓட விட்டுட்டியேடா,..............)
                                                                         
                                                                                                      -கத்துக்குட்டி                        
                      
                      
                                                           
                                                              விருது

வெடி வெடித்தது........அவன் ஓடத் தொடங்கினான்............ மின்னல் போல
ஐவரையும் முந்திக் கொண்டு ஓடத் தொடங்கினான்..அது நூறு மீட்டர் ஓட்டப்
பந்தயம் என்பதால் நான் மேலே உள்ள வரியை எழுதி முடிப்பதற்குள்
அவன் ஓடி வெற்றிப் பெற்றிருந்தான்...................
                             கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்ய கனத்த பெருமிதத்துடன்
மேடையேறி கம்பீரமாக விருதை வாங்கினான்...வீட்டிற்கு சென்று விருதை
தன் அம்மாவிடம் கொடித்தான்.............
                                   “எதுக்குடா இன்னொரு டிபன் பாக்ஸு ,,,..... சரி நாளைக்கு
ஸ்கூல்ல டெஸ்ட் இருக்கு போய்ப் படி,,,,,,,,,,...........”
                                                                                          -கத்துக்குட்டி
(கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.. அதை மீறி சிறுவர்கள்
                         படித்தால்  அதற்கு இத்தளம் பொறுப்பல்ல........................)
                                                                   நிர்வாணம்
அர்ஜுன் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணம் ஆனான்....தனது ஆண்குறியை
பிடித்து கசக்கத் தொடங்கினான்......அதை மேலும் கீழும் ஆட்டத் தொடங்கினான் ........அதை பிதுக்கி ஏதோ சுயமைதுனம் செய்வது போல்
செய்யத் தொடங்கினான்..................................................................
..............................................................................தீடிரென்று
அவன் அம்மா வந்து கையைத் தட்டிவிட்டு ஜட்டி போட்டு விட்டுச்
சென்றார்........
        
                                                                         -கத்துக்குட்டி                                                                                 காபி
இன்றிலிருந்து பல நூறு ஆண்டுகள் கழித்து இவ்வுலகம் ஹாலிவுட் படத்தில்
வரும் கிராபிக்ஸ் காட்சி போல உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை
வரிசை கிரமமாக அழிவது என முடிவானது.....உலகம் அழிவதை மறு கோடியில்
இருந்தவாறு நமது ஹீரோ அர்ஜுன் விஜய் டி.வி யின் நேரலையில் காணத்
தொடங்கினான்..........
                                                        கடைக்குச் சென்று 1/2 லிட்டர் ஆவின் பால்,
1-பூரு காபி தூள்,200 கிராம் சர்க்கரை வாங்கினான்.அப்படியே மளிகைக் கடை
பாக்கியையும் செலுத்திவிட்டு வந்தான்....வீட்டுக்கு வந்து டி.வி பார்த்தபடியே
காபி போடத் தொடங்கினான்....காபியை குடித்தப்படியே ஒவ்வொரு
சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்...இவன் கடைசி மடக்கு
காபி குடிப்பதற்கும் இவன் இருந்த வீடு அழிவதற்கும் சரியாக இருந்தது...............
                                                சொர்க்கத்திற்கு வந்தவுடன் இவன் சொன்ன முதல்
வார்த்தை.......”நல்ல வேளை காபியை குடிச்சுட்டேன் இல்லன்னா
ஆறிப் போயிருக்கும்........”
                                                                                              -கத்துக்குட்டி                
                                     
                                                               படிப்பு

அர்ஜுன் கடுமையான படிப்பாளி.அன்று இரவு முழுவதும் கண் விழித்து
படிக்கத் தொடங்கினான்....அவன் எழுதி எழுதி கிட்டத்தட்ட ஒரு
கொயர் நோட்டு காலியாகியிருந்தது...அவன் அம்மா வேறு அவன் தூங்கிவிடாமல் இருக்க அவ்வப்போது காஃபி போட்டுக் கொடுத்துக்
கொண்டேயிருந்தார்.காலையில் சீக்கீரம் எழுந்து மீண்டும் ஒரு முறை
REWISE செய்து கொண்டான்......சாமி கும்பிட்டுவிட்டு இரண்டு இட்லியை
அவசர அவசரமாக விழுங்கிவிட்டு கல்லூரிக்கு அரக்கப் பரக்க
கிளம்பினான்.......என்னதான் நன்றாக படித்திருந்தாலும் பக்கத்தில்
சென்றவுடன் பதற்றத்தில் மனசுக்குள் முணுமுணுத்தபடியே
சென்றான்........”i love you,....i love u....i luv u...luv u....i l u....."
                                                                             
                                                                                  -கத்துக்குட்டி
                                                         தண்ணி
அர்ஜுனுக்கு மட்டுமே  இருக்கும் ஒரு இராசி என்னவெனில் அவன் 
எப்போது குளிக்க பைப்பை திறந்தாலும் தண்ணீர் வராது.அன்றும்
அதேபோல தண்ணீர் வராததால் அவன் குளிக்க அடுத்த பிளாக்குக்கு
சென்றான்.குளித்துவிட்டு கிளம்பியதால் வகுப்பிற்கு லேட்டாகிவிட்டது.
 சார்          :ஏன் லேட்........?
அர்ஜுன் :சார்,.. தண்ணி வரல அதான் லேட் ஆயிடுச்சு
சார்           :இவங்கள்லாம் ஹாஸ்டல் தானே எப்டி ஒனக்கு மட்டும் லேட்டாகும்
                   ஒழுங்கா ரீசன் கூட ஒன்னால சொல்ல முடியாதா.......
இவங்கள்லாம் குளிக்காம செண்ட் அடிச்சுட்டு வந்தாங்க சார் .................என
சொல்ல வந்தவன் சொல்லாமல் வழக்கம் போல் தலைகுனிந்து நின்றான் .
                                                                                                  
                                                                                                                                        -கத்துக்குட்டி


                                                    
                                            சிகரெட்
அர்ஜுனும் , ரமேஷும் சிகரெட் புகைத்தப்படியே வருத்தத்துடன் பேசத்
தொடங்கினர்.சே....நல்லா வாழ்ந்த மனுசன்யா இப்படி ஆயிடுச்சு.
அவங்க அப்பா வேற வாழ்ந்த வீடு பறி போன அதிர்ச்சியில தீடிர்னு
இறந்து போயிட்டாரு.இவ்வளவு மோசமான சித்தப்பங்காரனா இருக்கான்
ஒன்னு விடாம அத்தனையும் புடுங்கிட்டு வுட்டுட்டான்.நல்லதுக்கே
காலம் இல்ல போல .....எதோ அந்த பையன்  படிச்ச படிப்ப வச்சு தான்
முன்னுக்கு வரணும் போல இருக்கு.பாவம்பா ரஜினி இன்னும் எவ்வளோ
தான் கஷ்டப்படப் போறாறோ.........................மணி அடித்தது................
.........இண்டர்வல் முடிந்து இருவரும் திரையரங்கினுள் சென்றனர்.
                                                                                         -கத்துக்குட்டி

No comments:

Post a Comment