Monday, September 22, 2014

அதிகாலை நேரம் சூரியன் விஸ்வரூபத்தை எடுக்கும் முன் தனது மெல்லிய
இளஞ்சிவப்பு கதிர்களை முன்னோட்டமாக வீசிக்கொண்டிருந்தான் . ப்ரியா  அந்த மலை உச்சி மீது நின்று கொண்டு அப்பனிப்படர்ந்த மலைப்பிரதேசத்தின்
அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் . இரண்டு கப் சூடான காபியை கொண்டு வந்த அர்ஜுன் ப்ரியாவிடம் கொடுத்தான் . இருவரும் அதை குடிக்கத் தொடங்கினர் .
இதுவரை தோழியாக இருந்த ப்ரியாவிடம் தனது காதலைச் சொல்ல அர்ஜுன் எத்தனித்தான் .
ப்ரியா
“ஆங்....சொல்லு “
உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்
“அதான் ...சொல்லுனு சொன்னன்லே ..”
இல்ல நீ அதை தப்பா எடுத்துக்க கூடாது
“தப்பா எடுத்துக்கற மாதிரி இருந்தா ...ஏன் சொல்ற ..சொல்லாதே ..”
நான் கண்டிப்பா அதை சொல்லியே ஆகணும் இனிமே அதை என்னாலே தாங்கிக்க முடியாது
”அப்ப சொல்லு...தப்பா , இல்லையானு நான் முடிவு பண்ணிக்கிறேன் “
அர்ஜுன் பெரும் தயக்கத்துடன் , நாக்கு உளற . இதய துடிப்பு அதிகரிக்க சொல்லி முடித்துவிட்டான் .
"I LOVE YOU "
                ப்ரியா அதிர்ச்சியடைந்தவளாய் அவனது கண்ணையே உற்று நோக்கினாள் . அவனும் செய்வதறியாது உள்ளுர பதறினான் . அவளது கண்களில்
இருந்த அதிர்ச்சி மெல்ல மெல்ல மலர்ந்தது . தனது காதலை வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியாமல் அவனை இறுக அணைத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடத் தொடங்கினாள் . மெல்லிய இசை காற்றோடு கலந்து வந்தது..............
.
.
.
.
கட்
.
.
.
.
.
ஷாட் ஓ.கே
.
.
.
.
.
.
பேக்கப் .
                                                                        -கத்துக்குட்டி

No comments:

Post a Comment