Tuesday, August 19, 2014

                                                             கடிதம்
நலம் , நலமறிய ஆவல் ,நாங்கள் இங்கு நலம் , நீ அங்கு நலமா,....
அப்பாவுக்கு மூன்று நாளாக காய்ச்சல் அதோடு நேற்றிலிருந்து பேதியும் சேர்ந்துக்
கொண்டது . சுகர் இருப்பதால் கை , கால்கள் வேறு வீங்கி விட்டது மருத்துவ செலவாக இரண்டாயிரம் ரூபாய் செலவாகிவிட்டது . உன் தம்பி நண்பர்களோடு
சேர்ந்து குற்றாலம் சென்று வரும் வழியில் பைக்கில் இருந்து கீழே விழுந்து இரண்டு பற்களை உடைத்துக்கொண்டான் .இரண்டு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தான் கிடக்கிறான் . மறுபடியும் மாப்பிள்ளை வரதட்சணை கேட்டு அக்காவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் , ஒரு வாரத்திற்குள் இருபதானாயிரம் ரூபாய் கேட்கிறார் முடிந்தவரை சீக்கிரம் அனுப்பி வைக்கவும் . நமது இரண்டு பசுக்களும் தீடிரென்று மூன்று நாட்களுக்கு முன்பு கொள்ளை நோய் வந்துஇறந்து போய்விட்டன . அதனால் வீடே வெறிச்சோடிப் போய் உள்ளது .மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடு முழுவதும் ஒழுகிக் கொண்டிருந்தது .அதை சரிசெய்ய வேற ஆயிரம் ருபாய் செலவாகும் போல் உள்ளது . அப்புறம் ,..என் தாலி செயின் வேற அடகுல மூழ்கிரும் போல இருக்குப்பா அதுக்கு ஒரு அஞ்சாயிரம் அனுப்புப்பா . சரி வேலை வேலைனு சுத்தாம ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிட்டு நிம்மதியா இருப்பா . உடம்ப பத்திரமா பாத்துக்க.
                                                    சுபம்
                                                                     இப்படிக்கு அன்புடன்
                                                                                                             அம்மா
(அடங் கொய்யால ....!!!இதப் படிச்சுட்டு எவனால நிம்மதியா இருக்கமுடியும்
இதுல நலம் நலமறிய ஆவல் வேற ,...பாவம்யா  அந்த பையன்,...)

No comments:

Post a Comment