Thursday, August 14, 2014

                                               பசி
கதவு பூட்டப்பட்டிருந்தது . அந்த அறையின் உள்ளே ஒரு மெல்லிய துளை வழியாக வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் ஒரு அமானுஷ்ய
பயத்தை விரவியபடியே இருந்தது . அவன் அந்த அறையின் ஒரு மூலையில்
தனது உடம்பை ஒடுக்கியபடி உட்கார்ந்திருந்தான் . ஆடை முழுவதும் கிழிந்து
உடம்பெங்கும் இரத்தக்கறையாக இருந்தது . அவனது கால் முழுவதும் கொப்பளங்களால் ஆக்கிரமித்திருந்தது . அந்த கொப்பளங்கள் வேறு உடைந்து
அதில் இருந்து சீழ் வடிந்து தரையில் வலிந்தோடிக் கொண்டிருந்தது . அந்த சீழின்
நாத்தம் அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது . அவனின் வயிறு உள்ளே இருக்கும் குடல்கள் தெரியுமளவுக்கு ஒட்டி போயிருந்தது . முகத்தில் பசி களை
கூட தெரியவில்லை பசி வெறித்தான் தெரிந்தது . இப்படி கூனிக் குறுகி பார்க்கவே அறுவறுப்பாக இருந்தான் . அவன் கண்களில் இருந்த சோகம்
நம்மை பற்றிக்கொண்டு விடுமோ என்னும் அளவுக்கு அவனது சோகம் அந்த
அறை முழுவதும் பரவியிருந்தது . பசியை பொறுக்க முடியாமல் அழுதுக்கொண்டே தரையில் கிடந்த பாதி கடிபட்டு அழுகிய நிலையில் இருந்த
 விரல்களை எடுத்து கடித்து தின்ன  ஆரம்பித்தான் . விரல்களை
கடித்து தின்ன சத்தில்லாமல் அவனது பற்கள் வேறு பெயர்ந்து விழுந்தது . அதையும் பொருட்படுத்தாமல் அவன் தின்ன முற்பட்டபோது விரலில் மாட்டப்பட்டிருந்த அவனது காதலியின் மோதிரம் வாயில் அகப்பட்டது .
அதை கண்டு கவலைக் கொள்ளும் நிலையில் கூட அவன் இல்லை என்பதே உண்மை . அதை தூக்கி எறிந்துவிட்டு விரல்களை கடிக்க ஆரம்பித்தான் .
வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது . முகத்தில் பசி வெறியுடன்
ஒரு கூட்டம் வெளியே கதவை உடைக்க முயற்சிசெய்துக்கொண்டிருந்தது .........................................ரேடியோ அறிவிப்பு காற்றில் கலந்துவந்தது
.....மூன்றாம் உலகப்போரை அடுத்து வந்த உணவுப்பஞ்சம் அதன்
உச்சக்கட்டத்தை அடைந்தது ,...இதே நிலை தொடர்ந்தால் மனித இனமே
அழியும் நிலை ஏற்பட்டுள்ளது,,,,, நன்றி .

                                                                               -கத்துக்குட்டி

No comments:

Post a Comment