சதுரங்க வேட்டை -விமர்சனம்
சதுரங்க வேட்டை வாழ்வதற்காக நடக்கும் வேட்டை . சதுரங்க வேட்டை தமிழில் வந்திருக்கும் ஒரு மற்றுமொரு வித்தியசமான கதைக்களம் . நட்டி
கதையின் நாயகனாக ஒரு நல்ல மற்றும் வித்திசயமான தேர்வு . தனது நடிப்பு
மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அவர் நம்மைக் கவர்கிறார் . படத்தின் மிகப்பெரிய பலமே படத்தின் வசனங்கள் தான் . என்னை படம் பார்க்கத்
தூண்டியதே படத்தின் ட்ரெய்லரில் வந்த வசனம் தான் . ஒவ்வொரு வசனமும்
ஆழமாகவும் , அறிவுத்தனமாகவும் உள்ளது . படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு தங்கள் பாத்திரத்திற்கு உயிர் சேர்த்துள்ளனர் . அதுவும் அந்த தூய தமிழ் பேசும் வில்லன் கதாபாத்திரம் அரசியல்வாதிகள் எப்படி தமிழ் பேசிக்கொண்டே நம்மை சுரண்டுகிறார்கள் என்பதை குறிப்பிடும்படி
அமைந்துள்ளதாகவே தோன்றுகிறது . படம் மொத்தமுமே வெவ்வேறு
விறுவிறுப்பான சம்பவங்களின் கோர்வைத் தான் . நாம் கேள்விப்பட்ட
சம்பவங்களையே சலிப்படையச் செய்யாமல் விறுவிறுப்பாக கொண்டு
சென்றதே இயக்குனரின் வெற்றி. எனக்கு படத்தின் முதல் பாதியை பார்க்கும்
போது தவறு செய்வதை நியாயமாக சித்தரிக்கும் ஹீரோ தவறான பாதையில்
நம்மை கொண்டு செல்கிறதே என்று தோன்றினாலும் இரண்டாவது பாதியில்
அதை நிவர்த்திச் செய்கின்றனர் . ஹீரோவின் மனம் மாற சொல்லப்பட்ட காரணம் தான் ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை . கடைசியில் ஹீரோயினை காப்பாற்றும் அந்த அடியாள் கேரக்டர் நமது மனதில் நிற்கிறது .
அந்த அடியாளை நானும் நிறைய படத்தில் கவனித்து வருகிறேன் அவருக்கு
நல்ல ஆளுமை இருந்தாலும் எவரும் அவரை இன்னும் திறம்பட உபயோகப்படுத்தவில்லை என்று நினைக்க்கிறேன் இந்த படம் உட்பட .
படத்தின் பின்னணி இசை பரவாயில்ல ரகம் தான் . படத்தின் ஒளிப்பதிவு
குறிப்பிடும்படி உள்ளது . படத்தின் பிற்பாதியில் வரும் சில காட்சிகள் கிளிஷே
தனமாக உள்ளன . படத்தின் எடிட்டிங் அருமையாக உள்ளது . இயக்குனரின்
முழு ஆளுமையே வசனத்தில் தான் தெரிகிறது . படம் லோ பட்ஜெட்டில்
எடுக்கப்பட்டது என்பது சில காட்சிகளின் போது தெரிகிறது . இயக்குனர்
இன்னும் திரைக்கதையில் தனது ஆதிக்கத்தை செலுத்தினால் இன்னும்
பெரிய ஆளாக வளர முடியும் . சதுரங்க வேட்டை ஒரு நல்ல த்ரில்லர் நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கலாம் . இரட்டை அர்த்த வசனம் கிடையாது .
எனது மதிப்பெண் (7/10).
-கத்துக்குட்டி

No comments:
Post a Comment