காபி
இன்றிலிருந்து பல நூறு ஆண்டுகள் கழித்து இவ்வுலகம் ஹாலிவுட் படத்தில்
வரும் கிராபிக்ஸ் காட்சி போல உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை
வரிசை கிரமமாக அழிவது என முடிவானது.....உலகம் அழிவதை மறு கோடியில்
இருந்தவாறு நமது ஹீரோ அர்ஜுன் விஜய் டி.வி யின் நேரலையில் காணத்
தொடங்கினான்..........
கடைக்குச் சென்று 1/2 லிட்டர் ஆவின் பால்,
1-பூரு காபி தூள்,200 கிராம் சர்க்கரை வாங்கினான்.அப்படியே மளிகைக் கடை
பாக்கியையும் செலுத்திவிட்டு வந்தான்....வீட்டுக்கு வந்து டி.வி பார்த்தபடியே
காபி போடத் தொடங்கினான்....காபியை குடித்தப்படியே ஒவ்வொரு
சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்...இவன் கடைசி மடக்கு
காபி குடிப்பதற்கும் இவன் இருந்த வீடு அழிவதற்கும் சரியாக இருந்தது...............
சொர்க்கத்திற்கு வந்தவுடன் இவன் சொன்ன முதல்
வார்த்தை.......”நல்ல வேளை காபியை குடிச்சுட்டேன் இல்லன்னா
ஆறிப் போயிருக்கும்........”
-கத்துக்குட்டி

No comments:
Post a Comment