Thursday, July 3, 2014

                                                                     கயிறு
இடம்         = சாலையோர கசாப்புக்கடை
நேரம்         = முற்பகல் 10 மணி
மாந்தர்கள் =ஆடு , கசாப்புக்கடைக்காரன்

                           ஆடு கட்டப்பட்டிருந்தது.....கசாப்புக்கடைக்காரன் கத்தியை
பட்டைத் தீட்டிக்கொண்டிருந்தான்.
(க.க.கா பின்குறிப்பு : அவன் தனது இருபதாவது வயதில் இத்தொழிலுக்கு
வந்தான். 1934- லிருந்து அவன் கடை ஒரே இடத்தில் இயங்கிகொண்டிருக்கிறது.
அவன் கடையில் 2014 வரை எதுவுமே மாறவில்லை ஆடு கட்டப் பயன்படும்
கயிறைத் தவிர.  முக்கிய குறிப்பு அவன் பெயர் அர்ஜுன்..)

                               இந்த இடத்திலிருந்து கதையில் ஒரு நாற்பதைந்து நிமிடம்
பின்னோக்கிச் செல்வோம்.............கசாப்புக்கடைக்காரன் ஆட்டின்  கழுத்தை
அறுக்கப் போகையில் கைகள் நடுங்க பசி மயக்கத்தில் சுருண்டு விழுந்தான்.
சிறிது நேரம் கழித்து தானாக சுதாரித்துக்கொண்டு எழுந்து ஒரு கம்மங்கூழை வாங்கி குடித்து தன் காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் அறுக்கத் தயாரானான்.இம்முறை அவன் அறுக்கும் போது கத்தி மொன்னையாக இருந்ததால் கழுத்து அறுபடவில்லை.அதனால் அருகில் இருந்த கல்லில் கத்தியை பட்டைத் தீட்டத் தொடங்கினான்.அவன் கத்தியை பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து செத்துப்போனான்.................................................................................
...........................ஆடு கட்டப்பட்டிருந்தது.


                                                                                                   -கத்துக்குட்டி

No comments:

Post a Comment