Monday, July 7, 2014

                                                      கொலை

அர்ஜுன் அன்றுதான் தான் இதுவரை செய்த உயிர்க்கொலைகளை எண்ணி மனம்
வருந்தத் தொடங்கினான்..........தூ .......வெறும் பணத்துக்காகவா ஈவு ,
இரக்கமில்லாமல் இத்தனை உயிர்களை வெட்டிச் சாய்த்தேன்....என்னால்
எத்தனையோ குடும்பங்கள் நிம்மதியின்றி , உரக்கமின்றி தவித்திருக்குமே
அந்த பாவ பணத்திலா இந்த உடம்பை வளர்த்தேன் .....தன்னை நினைக்க
நினைக்க அவனுக்கு அவன் மீதே வெறுப்பு ஏற்பட்டது ..பிறகு தீர்க்கமான
முடிவெடுத்தவனாய் தன் பாவங்களுக்கு பிரயச்சித்தம் தேட எண்ணினான்...
தெருவில் தனியொரு மனிதனாக நின்று போராடத் தொடங்கினான்....
              “வெட்டாதீர் , வெட்டாதீர் , மரங்களை வெட்டாதீர் , ........”

(கத்துக்குட்டி : எந்த ஒரு பெரிய போரட்டாமும் தனி மனிதனில் இருந்து தான்
தொடங்குகிறது........)
                                                                                     -கத்துக்குட்டி

No comments:

Post a Comment