Monday, July 7, 2014

குலதெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று...ஏன் தவிர்க்க
வேண்டும் ...கூடாது... குலதெய்வ வழிபாடு எளிய மக்களின் வழிபாடு , ஆதிக்கச் சாதியினரின் தடைகளிலிருந்து விடுப்பட்டு அவர்களுக்கு மட்டுமே
உரித்தான கடவுளின் வழிபாடு......,,,, எங்கள் குலதெய்வ கோயில் வழிபாட்டிற்காக மலைமீதுள்ள முனி கோயிலுக்கு சென்றோம்......நான் 
பெரியவர்களின் நம்பிக்கையை எப்போதும் கெடுக்க விரும்புவதில்லை
என்பதால் சடங்குகளை சொல்வது போலவே செய்துவந்தேன்...ஆனால் எனது
தம்பியும் அவனது நண்பர்களும் அவ்வாறு இல்லை....சடங்குகளை
கிண்டல் செய்துகொண்டும் ,..... fb la photo போட செல்ஃபிகளை
கிளிக்கியவாறும் இருந்தனர்....சரியாக சேவலை காவு கொடுக்கும் சமயத்தில்
எனது ஒன்று விட்ட பெரியம்மாவுக்கு எப்போதும் வருவது போல சாமி
பிடித்துக் கொண்டது,,,.....அவரும் சாமியாடியவாரே குறி சொல்ல
ஆரம்பித்தார்...அவர் முறையே நான் எனது தம்பி , தாத்தா , பாட்டி ,பெரியம்மா
அக்கா என குறி சொல்லி வந்தார்,.....அவர் இதுவரை குடும்பத்துக்குள் குறி
சொல்லி வந்ததால் பிரச்சனை எதுவும் இல்லை,....சிறிது நேரம் கழித்து
அங்கே வந்திருந்த எனது தாத்தாவின் நண்பருக்கு குறி சொல்ல 
ஆரம்பித்தவுடனேயே தடுமாற ஆரம்பித்துவிட்டார்..அதை தொடர்ந்து
எனது தம்பியின் நண்பனுக்கு குறி சொல்லும் போது அவர் சொன்னது
எல்லாவற்றையும் இவன் நிராகரித்து கொண்டே வர சாமி அதிவிரைவிலேயே
மலை ஏறிவிட்டது,......இதற்கிடையில் பூசாரி வேறு பெரியம்மாவை பொய்
சாமி என்று சொல்ல அந்த நேரம் வேறு ஒரு சின்ன சலசலப்பு .
                                       
                                      இதற்கு முன்பே நான் பெரியவர்களின்  நம்பிக்கையை கெடுக்க மாட்டேன் என்று சொன்னதால் இதுவரை நடந்த கூத்துகளுக்கு
நான் சிறிதும் சிரிக்காமல் முகத்தை சீரியசாக தான் வைத்துக் கொண்டேன்..
அப்படி வைத்துக்கொண்டதன்மூலம் சிறிது நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டேன் அது இக்கட்டுரையின் கடைசி அத்தியாயத்தில் தெரிய
வரும்..

                                     இதனால் எனது பெரியம்மா எல்லாரையும் ஏமாற்றிவிட்டார்
என்றும் நான் சொல்ல மாட்டேன்...இங்கு அவரது அடக்கிவைக்கப்பட்ட ஆளுமையை தான் நான் பார்க்கிறேன்,,,சாமி வந்தவுடன் அவர் எவருக்கும்
கட்டுக்கடங்காமல் ஆடும் ஆட்டமும் , தனது அப்பா , அம்மா யாரையும்
மதிக்காது அவர்களை வாடா , போடா , என்னாடி என்று அழைப்பதும்
அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் மன நிறைவைத் தந்திருக்க வேண்டும் .
எனது பெரியம்மா அதிகம் பேசி நான் பார்த்ததில்லை , ஆனால் சாமி
வந்து ஆடும் போதுதான் அவர் அடக்கி வைத்திருந்த பேச்சும் அவரது
ஆதங்கமும் வெளிப்படுகிறது,....இதனால் தான் என்னவோ எனது
பெரியம்மாவுக்கு மட்டும் மாதத்தில் பத்து தடவைக்கு மேல்
சாமி பிடிக்கிறது என்று நினைக்கிறேன்.....

                                             இரவு நான் ஊருக்கு கிளம்பும் சமயத்தில் வேறு
பெரியம்மாவுக்கு சாமி பிடித்தது,,,..வழக்கம்போல் படைத்த சாரயத்தை குடித்த
எனது தாத்தாவில் ஆரம்பித்து காலையில் தன்னை பழி சொன்ன சாமியார் வரை திட்டித்தீர்த்துவிட்டு என்னை பார்த்துச் சொன்னார் இவன் தான் என் பிள்ளை காலையில் எனக்காக முறையாக உழைத்தவன் இவனை நான்
நன்றாக வைத்திருப்பேன் என்று கூறி தீருநீர் வைத்து விட்டு வெகு நேரம்
சாமியாடியதால் களைப்பில் மலையேறினார்......................

                                                 இதில் என்ன மகிழ்ச்சியென்றால்  எனது பெரியம்மாவுக்கு இருந்த என்னை பாரட்ட வேண்டும் என்ற எண்ணம் இதன்
மூலமாவது நிறைவேறியதே என்பது தான்.....

                                                                                                  -கத்துக்குட்டி

No comments:

Post a Comment