Tuesday, July 15, 2014

இன்று காமராஜர் பிறந்தநாள்,.இந்த நாளை நினைத்தாலே எனது ஞாபகத்திற்கு வருவது எனது பள்ளியில் வருடாவருடம் நடைப்பெற்ற காமராஜர் விழா தான் ,...ஆறாம் வகுப்பு தான் முதன்முறையாக காமராஜர் பிறந்தநாளை எனக்கு
அறிமுகப்படுத்தியது,..அன்றிலிருந்து ஒவ்வொரு வருடம் நடைப்பெறும்
காமராஜர் விழாவிலும் நான் ஆசைஆசையாக பங்குகொள்வேன்.பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டி என அந்த நாளே கலகலக்கும்,..அதுமட்டுமல்ல ஒவ்வொரு காமராஜர் பிறந்தநாள் அன்றும்
பள்ளியின் சத்துணவில் போடும் முட்டையின் எண்ணிக்கை ஒன்றாக உயரும். நான் பத்தாவது படிக்கும்போது வாரத்திற்கு மூணு முட்டை
போட்டார்கள்,...அதுமட்டுமல்ல எனது பள்ளி இருந்த இடம் காமராஜர் நகர்
காலனி ,..பள்ளியின் பெயர் காமராஜர் உயர்நிலைப்பள்ளி,....எங்கள் பள்ளியை திறந்து வைத்ததே காமராஜர் தான் ,..அப்டி இருந்து காமராஜர் பத்தி போஸ்ட் போடாம இருக்கு முடியமா ,....


                                                                                    -கத்துக்குட்டி

No comments:

Post a Comment