Tuesday, July 15, 2014

                                             500 ரூபாய்
அர்ஜுன் எப்போது பயணம் செய்தாலும் ரிசர்வ் செய்துதான் செல்வான்,....
ஆனால் அன்று அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் அங்கு சென்று
எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கு சென்றான்,..
இந்த இடத்தில் அர்ஜுனை பற்றி அவனுக்கு சூதுவாது எதுவுமே தெரியாது,..
எவன் எதை சொன்னாலும் அவன் நம்பி விடுவான்,...

                                       பஸ்ஸ்டாண்டில் சென்று சென்னைக்கான கட்டணத்தை
விசாரித்தப்பொழுது எல்லோரும் 1200 ரூபாய் என்று சொன்னார்கள்,..ஆனால் இவனிடம் இருந்ததோ வெறும் 500 ரூபாய் . கடைசியில் ஒரு பஸ்காரன்  1000
ரூபாய் கேட்டான்,...இவன் தன்னிடம் வெறும் 500 தான் உள்ளது என்று 500 ரூபாய் நோட்டை எடுத்துக் காண்பித்தான்,..அவன் சிறிது சலித்தப்படியே பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தான் ,...அர்ஜுன் அவருக்கு
நன்றி சொல்லியபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து நிம்மதி பெருமூச்சு
விட்டான்.பஸ்காரனின் பெருந்தன்மையை மனசுக்குள் மெச்சிக் கொண்டான்.
அருகில் இருந்தவரிடம் எவ்வளவு டிக்கெட் என்று கேட்டான்.அதை ஏன் தம்பி
கேட்கீறீங்க முன்னூறு ரூவா புடுங்கிட்டான் படுபாவி பய என்றார் . தான் ஏமாந்ததை எண்ணி மனம் நொந்தப்படியே தூங்கிப்போனான் ....கதை ஆசிரியனான எனக்கு எண்ண நிம்மதி என்றால் அவன் பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாயை நிஜமாகவே அவன் மறந்து போயிருந்தது தான்,...

                                                                    -கத்துக்குட்டி

No comments:

Post a Comment