Thursday, July 17, 2014

                                               ரேடியோ                            
                             
                ஒரு முக்கிய அறிவிப்பு விண்வெளியை ஆராய்வதற்காக நமது
விஞ்ஞானிகள் அனுப்பிய INEV 21 வெறறிகரமாக தனது பாதையை அடைந்தது.

                    INEV 21 ஒளியின் வேகத்தை விட நூறு மடங்கு வேகமாக செல்ல
கூடியது . அது பால்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் தொடர்ந்து
ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறது.

                    இது வரை வந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது கிரகத்தை 
  தவிர வேறு எந்த கிரகத்திலும்  உயிரினங்கள் கண்டறியப்படவில்லை,.

                    ஒரு ஆச்சரியமூட்டும் அறிவிப்பு ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான ஆதாரம் நம்பும்படி கிடைத்துள்ளது,..அங்கிருந்து ஒரு உயிர்சாம்பிளை எடுத்துக்கொண்டு INEV 21 நமது கிரகத்திற்கு திரும்புகிறது,.

                    INEV 21 கொண்டு வந்த உயிர்சாம்பிள் ஆனது பாதுகாப்பான ஒரு
கண்ணாடிபேழையில் அடைக்கப்பட்டுள்ளது . அது பார்க்கவே மிக விசித்திரமாக உள்ளது  . அது தனது மார்பை உள்ளேயும் , வெளியேயும் இழுத்துக்கொண்டு இருக்கிறது . அதற்கு இரண்டு கைகள் , இரண்டு கால்கள்
ஒரு தலை , இரண்டு கண்கள் , இரண்டு காதுகள் , ஒரு மூக்கு , ஒரு வாய் என
பார்க்கவே அசிங்கமாகவும் , குமட்டும்படியாகவும் , அறுவறுப்பாகவும்
உள்ளது . அதை வைத்து நமது விஞ்ஞானிகள் மேலும் பல ஆராய்ச்சிகள்
செய்ய உள்ளனர் .

                                             நன்றி
                   மறுஒளிப்பரப்பு மாலை 82.35 மணிக்கு .

                                                                                         -கத்துக்குட்டி 

No comments:

Post a Comment