Wednesday, July 2, 2014

                                          படிப்பு

அர்ஜுன் கடுமையான படிப்பாளி.அன்று இரவு முழுவதும் கண் விழித்து
படிக்கத் தொடங்கினான்....அவன் எழுதி எழுதி கிட்டத்தட்ட ஒரு
கொயர் நோட்டு காலியாகியிருந்தது...அவன் அம்மா வேறு அவன் தூங்கிவிடாமல் இருக்க அவ்வப்போது காஃபி போட்டுக் கொடுத்துக்
கொண்டேயிருந்தார்.காலையில் சீக்கீரம் எழுந்து மீண்டும் ஒரு முறை
REWISE செய்து கொண்டான்......சாமி கும்பிட்டுவிட்டு இரண்டு இட்லியை
அவசர அவசரமாக விழுங்கிவிட்டு கல்லூரிக்கு அரக்கப் பரக்க
கிளம்பினான்.......என்னதான் நன்றாக படித்திருந்தாலும் பக்கத்தில்
சென்றவுடன் பதற்றத்தில் மனசுக்குள் முணுமுணுத்தபடியே
சென்றான்........”i love you,....i love u....i luv u...luv u....i l u....."
                                                                             
                                                                                  -கத்துக்குட்டி

No comments:

Post a Comment