Tuesday, July 8, 2014

                                                     முதலாளி

எனது முதலாளி மிகப்பெரிய செல்வந்தர்...என்னை நன்றாக கவனித்துக்
கொள்வார்,....அவருக்கு எப்போதும் நான் ஸ்பைடர்மேன் உடை அணிந்து
கொள்வதுதான்பிடித்திருக்கிறது,...அவருக்கு பிடித்துள்ள காரணத்தால் நானும் அதைப்பெரிதாக பொருட்படுத்தவில்லை...எனக்கு அவர் மேல் மனக்குறையே வந்தது இல்லை அந்த சம்பவம் நடக்கும் வரை,..ஆம்,...அவர் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ,... என்னால் கனவிலும் நினைத்து பார்க்க
முடியாத பேரழகியை எனக்கு மணப்பெண்ணாகப் பார்த்தார்..திருமணம்
ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன,...அதை பார்க்க பார்க்க எனது
முதலாளியை நினைத்து எனக்கு கர்வம் ஏற்பட்டது,...கல்யாண நாள்
அன்று எனது முதலாளியின் நண்பர்கள் என்னை வாழ்த்த வந்த வண்ணம்
இருந்தனர்,,..சரியாக தாலி கட்டும் சமயத்தில் எனது முதலாளி தாலியை
வாங்கிக் எனது மனைவிக்கு கட்டிவிட்டு எங்களுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதாக சொன்னார்,,..இதை கூடியிருந்தவர்களும் ஏற்றுக்கொண்டு
அட்சதை தூவிவிட்டு சென்றனர்,..எனது மனைவிகூட ஒன்றும் சொல்லவில்லை
எனக்கு நடப்பது எதுவும் புரியவில்லை,...பிறகு சிறிது நேரம் புலம்பிவிட்டு
முதலாளியை எதிர்த்துக் கேட்க முடியாததால் அவளுடன் சேர்ந்து வாழ
ஆரம்பித்தேன்............-பொம்மைக் கல்யாணம்-.....

                                                                       -கத்துக்குட்டி

No comments:

Post a Comment